ஈரோட்டில் பிளீச்சிங் ஆலை உரிமையாளர் வீட்டில் 14 சவரன் தங்க நகை மற்றும் 10 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு தட்டாங்காடு பகுதியை சேர்ந்தவர் மணி. இவர் பிளீச்சிங் பட்டறை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் தனது குடும்பத்துடன் நேற்று உறவினர் திருமணத்திற்காக சென்னிமலைக்கு சென்றுவிட்டு இன்று காலை வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, மர்ம நபர்கள் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 14 சவரன் தங்க நகை மற்றும் 10 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து கொள்ளை சம்பவம் குறித்து வீரப்பன்சத்திரம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உன்னாவ் வன்கொடுமை: அமைச்சர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்... விரட்டியடித்த போலீஸ்..!
ரஜினியின் வேண்டுகோள் முதல் தமிழக வீராங்கனைக்கு கிடைத்த தங்கம் வரை...! #TopNews
நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது - தர்பார் இசை வெளியீட்டில் பேசிய ரஜினிகாந்த்!
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்
"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்" ப.சிதம்பரம் சாடல்