[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்
  • BREAKING-NEWS தென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது

மின்னல் தாக்குவதை முன்னதாகவே கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம்..!

using-ai-to-predict-where-and-when-lightning-will-strike

குறிப்பிட்ட இடத்தில் மின்னல் தாக்குவதை அரை மணி நேரம் முன்கூட்டியே கண்டுபிடிக்கும் தொழில் நுட்பத்தை இங்கிலாந்து மாணவர் கண்டுபிடித்துள்ளார்

மின்னல் என்பது இயற்கை. மழைக்காலங்களில் உருவாகும் திடீர் மின்னல்களால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகம். விவசாயிகள், பொதுமக்கள் என பலர் மின்னலால் உயிரிழக்கின்றனர். உயிரிழப்புகள் மட்டுமின்றி கட்டடங்கள், மிகப்பெரிய கோபுரங்கள் என பல கட்டுமானங்களையும் மின்னல்கள் சேதப்படுத்துக்கின்றன. கண் இமைக்கும் நொடியில் உருவாகி தாக்கும் மின்னல்களை கொஞ்சம் முன்னதாகவே தெரிந்துகொண்டால் அதனால் ஏற்படும் பாதிப்புகளை அதிகளவில் தடுக்கலாம். அதற்கான தொழில் நுட்பத்தை இங்கிலாந்து ஆராய்ச்சி மாணவர் கண்டுபிடித்துள்ளார்.

குறிப்பிட்ட இடத்தில் மின்னல் தாக்குவதை அரை மணி நேரம் முன் கூட்டியே கண்டுபிடிக்கும் தொழில் நுட்பத்தை அவர் கண்டுபிடித்துள்ளார். Artificial intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் மூலம் எளிமையான, செலவு குறைவான முறையில் இவ்வசதி உருவாக்கப்பட்டுள்ளதாக அதைக் கண்டுபிடித்த அமீர் ஹூசைன் மொஸ்தபி தெரிவித்துள்ளார். 

தற்போதுள்ள மின்னல் முன்னறியும் தொழில்நுட்பங்கள் சிக்கலும் செலவும் நிறைந்ததாக இருப்பதாக அவர் கூறினார். மின்னல் தாக்குதலால் ஆண்டுதோறும் உலகளவில் பல்லாயிரக்கணக்கானோர் பலியாகும் நிலையில் இந்த கண்டுபிடிப்பு பெருமளவில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close