திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகையான ஜெயலக்ஷ்மி தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டதை, பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த ஜெயலக்ஷ்மி சென்னையில் வசித்து வருகிறார். இவர் ‘மாயாண்டி குடும்பத்தார்’, ‘வேட்டைக்காரன்’, ‘கோரிப்பாளையம்’, ‘முத்துக்கு முத்தாக’, ‘விசாரணை’, ‘குற்றம் 23’, ‘நோட்டா’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இதுதவிர தமிழ் தொலைக்காட்சிகளின் சில சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார்.
இவர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளதாக பொன்.ராதாகிருஷ்ணன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், “திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகையும், வழக்கறிஞருமான ஜெயலக்ஷ்மி, இன்று தன்னை தமிழக பாஜகவில் இனைத்துக் கொண்டார். பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி மற்றும் அவரது திட்டங்கள் மீதான ஈர்ப்பு தன்னை பாஜகவில் இணைத்துக் கொள்ள காரணம் என தெரிவித்தார்” என்று பொன்.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
"தர்பார் வெளியானவுடன் ரஜினியின் அரசியல் தர்பார் அரங்கேறும்"- தமிழருவி மணியன்..!
சென்னையில் லாட்டரி விற்பனை.. புதிய தலைமுறையின் கள ஆய்வில் அதிர்ச்சி தகவல்
சென்னையில் முதல் ஒரு நாள் போட்டி: வெற்றியுடன் தொடங்குமா இந்தியா ?
ஃபாஸ்ட் டேக் அமல் முதல் சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி வரை ! #Topnews
மக்காச்சோளக்காட்டில் சடலமாக கிடந்த பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை - 3 பேர் கைது