கடந்த ஆண்டு நாம் தமிழர் கட்சியினருக்கும், மதிமுகவுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட வழக்கின் குற்றப்பத்திரிக்கை நகல் சீமானிடம் வழங்கப்பட்டது.
திருச்சி விமான நிலையத்திற்கு கடந்த ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் வருகை தந்தனர். அப்போது கார் நிறுத்துவது தொடர்பாக இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இருதரப்பும் கட்சி கொடி கம்புகளால் ஒருவரையோருவர் தாக்கி கொண்டனர்.
இதுதொடர்பான வழக்கில் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 14 நிர்வாகிகள் ஆஜராகினர். அவர்களிடம் வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கபட்டது. சம்பந்தபட்டவர்களின் மீது மோதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது - தர்பார் இசை வெளியீட்டில் பேசிய ரஜினிகாந்த்!
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்
"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்" ப.சிதம்பரம் சாடல்
கருணை மனுவை திரும்ப பெறுவதாக நிர்பயா குற்றவாளி அறிவிப்பு
போக்குவரத்து விதிமீறல்: கோவையில் மட்டும் ரூ.2.9 கோடி அபராதம் வசூல்!