[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது அதிமுக
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னை ஐஐடியில் மாணவர்களின் தற்கொலைகள் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
  • BREAKING-NEWS ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி புகார் மனு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தெர்தலில் மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் மத்திய நிதி அமைச்சக செயலாளராக நியமனம்

சேலத்தில் போலீஸ் எனக் கூறி வழிப்பறியில் ஈடுபட்ட அரசியல் பிரமுகர்

a-political-person-has-arrested-in-salem

சேலத்தில் போலீஸ் எனக் கூறி வழிப்பறியில் ஈடுபட்ட அமமுக பிரமுகரை போலீசார் கைது செய்தனர். 

சேலம் கன்னங்குறிச்சி போலீசார் சின்ன திருப்பதி மெயின் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த சொகுசு கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்ட போது, போலீசார் பயன்படுத்தும் 4 தொப்பி மற்றும் இரண்டு லத்தி ஆகியவை இருந்துள்ளன. அது குறித்து கார் ஓட்டி வந்தவரிடம் விசாரித்ததில் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்த அமமுக மாநகர இளைஞரணி செயலாளர் ஜெகதீஸ்வரன் என்பவர் தன்னை போலீஸ் எனக் கூறிக் கொண்டதும் தெரியவந்தது.

மேலும் அந்தப் பகுதியை சேர்ந்தவர்களை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டு உள்ளதாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஜெகதீஸ்வரனை காவல்துறையினர்  கைது செய்தனர். ஜெகதீஸ்வரனிடமிருந்து சொகுசு கார், 4 போலீஸ் தொப்பி, மற்றும் 2 லத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ஜெகதீஸ்வரன் தன்னை போலீஸ் என கூறி வேறு எங்கெல்லாம் கைவரிசை காட்டியுள்ளார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close