[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2003ஆம் ஆண்டிலிருந்தே தன்னை அழிக்க முயற்சி நடப்பதாக நித்தியானந்தா புகார்
  • BREAKING-NEWS வங்கிகளுக்கான கடன் வட்டியில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு: ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதமாக நீடிக்கும்
  • BREAKING-NEWS திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார்

நாம் தமிழரை முந்திய 'பனங்காட்டுப்படை' ஹரிநாடார்

harinadar-got-3rd-place-in-nanguneri

நாங்குநேரி இடைத்தேர்தலில் பனங்காட்டுப்படை ஹரிநாடார் நாம் தமிழர் கட்சியை பின்னுக்குத் தள்ளி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்

இடைத்தேர்தல் நடைபெற்ற நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் வாக்குகள் எண்ணிக்கை இன்று நடைபெற்றது. ஆரம்பம் முதலே இரு தொகுதிகளிலும் அதிமுக முன்னிலையில் இருந்தது. இதில் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் கிட்டத்தட்ட 44ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் முன்னிலையில் உள்ளார். இந்நிலையில் மூன்றாம் இடத்தில் நாம் தமிழர் கட்சியை பின்னுக்குத் தள்ளியுள்ளார் பனங்காட்டுப்படை ஹரிநாடார்.

சுயேச்சையாக போட்டியிட்ட ஹரிநாடார் 2470 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 2141 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். இதன் மூலம் நாங்குநேரியில் பனங்காட்டுப்படை ஹரிநாடார் 3 வது இடத்தை பிடித்துள்ளார். நோட்டாவிற்கு 788 வாக்குகள் கிடைத்துள்ளன.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close