[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா ஆளுநரை நாளை சந்திக்க சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்

ராதாபுரம் தேர்தல் வழக்கு: திமுகவின் கோரிக்கை நிராகரிப்பு

radhapuram-election-case-dmk-demand-rejected-in-sc

ராதாபுரம் தேர்தல் வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டுமென்ற திமுகவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அதிமுக வேட்பாளர் இன்பதுரையின் மனுவை முன்கூட்டியே விசாரிக்கக்கோரிய திமுக வேட்பாளர் அப்பாவு கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிகாரித்துள்ளது. வழக்கு பட்டியலிட்ட பிறகே விசாரணைக்கு ஏற்கப்படுமென உச்சநீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்தது,

கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 69, 90‌ வாக்குகளுடன் வெற்றி பெற்‌றதாக அறிவிக்கப்பட்டது. திமுக வேட்பாளர் அப்பாவு 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இன்பதுரை வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பாவு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், செல்லாது என அறிவிக்கப்பட்ட 203 தபால் வாக்குகளையும், 19, 20, 21 ஆகிய சுற்றுகளில் எண்ணப்பட்ட வாக்குகளையும் மறு எண்ணிக்கை செய்யும்படி தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி வாக்குகளும் எண்ணப்பட்டன.

இதனிடையே உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அதிமுக எம்எல்ஏ இன்பதுரை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதாவது மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என அதிமுக வேட்பாளர் இன்பதுரை வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. அதேசமயம் ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வரும் 23-ஆம் தேதி வரை வெளியிட உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில் ராதாபுரம் தேர்தல் வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டுமென்ற திமுகவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close