[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS திருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்
  • BREAKING-NEWS “மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
  • BREAKING-NEWS நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு

சீன அதிபர் வருகை - சென்னையில் சில இடங்களில் ரயில்கள் நிறுத்தம்

tomorrow-some-train-are-stopped-some-hours

சீன அதிபர் ஜின்பிங் நாளை சென்னை வரும்போது கிண்டி வழித்தடத்தில் சிறிதுநேரம் ரயில்கள் நிறுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஸி ஜின்பிங் நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரண்டு நாட்கள் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர். இந்தச் சந்திப்பு வரலாற்று சிறப்பு மிக்க மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இதற்காக தமிழக அரசு பல பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. 

மேற்கண்ட இரண்டு நாட்களில் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாமல்லபுரம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஐடி நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், சீன அதிபர் ஜின்பிங் நாளை சென்னை வரும்போது கிண்டி வழித்தடத்தில் சிறிதுநேரம் ரயில்கள் நிறுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் புறநகர், விரைவு ரயில்கள் பல்லாவரம் பகுதியில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு பிறகு அனுப்பப்படும் எனவும் தமிழக அரசு கூறும் நேரத்தில் சிறிது நேரம் ரயில்கள் நிறுத்தப்படும் எனவும் தெற்கு ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close