நெல்லை மாவட்டத்தில் அரசுப் பேருந்தில் டிக்கெட் கேட்ட நடத்துநரை காவலர் ஒருவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையிலிருந்து நாகர்கோவில் செல்லும் பேருந்தில் ஆயுதப்படை காவலர்களான மகேஷ்வரன் மற்றும் தமிழரசன் ஆகிய இருவரும் பணி காரணமாக கூடங்குளம் செல்வதற்கு பயணித்தனர். அப்போது பேருந்தின் நடத்துனர் ரமேஷ்நர் இருவரிடமும் வாரண்ட் கேட்டுள்ளார். அதற்கு வாரண்ட் இப்போது தான் எழுதிக் கொண்டிருக்கிறோம், முடிந்தவுடன் தருகிறோம் எனக் காவலர்கள் கூறியுள்ளனர்.
வாரண்ட் கொடுப்பதில் காலதாமதம் ஆனதால் நடத்துநருக்கும், காவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ஒரு காவலர் நடத்துநரை தாக்கினார். இதில் நடத்துநருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. தலையில் ரத்தம் வழிந்த நிலையில், மூன்றடைப்பு காவல்நிலையத்தில் நடத்துநர் புகார் அளித்தார். அதனைத்தொடர்ந்து, காவலர்களான மகேஷ்வரன் மற்றும் தமிழரசன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே நடத்துனர் ரமேஷ் மீது காவலர்களும் புகார் அளித்துள்ளனர்.
பாலம் இல்லாத பரிதாபம் - 30 ஆண்டுகளாக அச்சத்துடன் படகில் செல்லும் மக்கள்
“நித்யானந்தா அழைத்தால் ‘கைலாசம்’ செல்லத் தயார்” - ஆர்வத்தில் மடாதிபதி
28 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணையும் குஷ்பு - உறுதியானது மீனா கதாபாத்திரம்
பழங்குடியின மக்களின் வாழ்க்கைக்கு போராடிய இளைஞர் - விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு
குடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே
“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..!
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
தாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்ஷன்: மனங்களை வென்ற வீடியோ!