[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை

மதிய நேர முக்கியச் செய்திகள் சில...

afternoon-top-news-19092019

தமிழகம், புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும். தென்கிழக்கு வங்க கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொட்டி தீர்த்த மழை. சென்னையில் சுவர் இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு.

தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு வரும் 23-ஆம் தேதி தொடங்கும். போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு.

ஆள்மாறாட்டம் புகாரில் மருத்துவக் கல்லூரி மாணவரைத் தேடி சென்னை வந்தது தேனி காவல்துறை. அனைத்து முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களின் ஆவணங்களை சரிபார்க்க உத்தரவிட்டிருப்பதாக மருத்துவக் கல்வி இயக்குநர் புதியதலைமுறைக்கு பேட்டி.

வரும் 6-ஆம் தேதி சென்னையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு. மு.க.ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்றபின் நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் ஆகும்.

தேஜஸ் போர் விமானத்தில் பறந்தார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். தேஜஸ் விமானத்தை வாங்க தென்கிழக்கு ஆசிய நாடுகள் முன்வந்துள்ளதாகவும் பெருமிதம்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close