[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தடியடி
  • BREAKING-NEWS தமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் தலைமை தகவல் ஆணையராக நியமனம்
  • BREAKING-NEWS சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி

திருவள்ளூர் கனிமவளத்துறை அலுவலகத்தில் விடிய விடிய சோதனை !

raid-at-thiruvallur-collector-office

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கனிமவளத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விடியவிடிய சோதனை நடத்தி வருகின்றனர். இரண்டாவது நாளாக இன்றும் சோதனை தொடர்கிறது

லஞ்சம் பெற்றுக்கொண்டு மணல் கொள்ளைக்கு துணை போதல், ஏரிகளில் சவுடு மணல் எடுக்க அனுமதி அளிப்பதற்கு கையூட்டு பெறுதல் போன்ற புகார்களின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது.

திடீரென நேற்று மாலை 4 மணிக்கு கனிமவளத்துறை அலுவலகத்திற்குள் நுழைந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் கதவுகளை தாழிட்டுக் கொண்டு 12 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தி வருகின்றனர். கனிமவளத்துறை உதவி இயக்குநர் சீனிவாசராவ் மற்றும் ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தெரிகிறது. 

லஞ்ச ஒழிப்புத்துறையினர் எழுப்பிய கேள்விகளுக்கு சீனிவாச ராவ் சரிவர பதில் அளிக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து மணல் குவாரி குறித்து பலருடன் சீனிவாச ராவ் பேசிய ஆடியோக்கள் மற்றும் வங்கி பரிவர்த்தனை விவரங்களை அவரது செல்போனில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் சேகரித்திருப்பதாக தெரிகிறது. மேலும் முக்கிய ஆவணங்கள் மற்றும் மடிக்கணினி ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close