[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

‘அனுமதி பெறாத பேனர்களை அச்சடித்தால் உரிமம் ரத்து’ - சென்னை மாநகராட்சி 

printing-of-unauthorized-banners-will-result-in-the-license-being-canceled-and-sealed-says-chennai-corporation

அனுமதிபெறாத பேனர்களை அச்சடித்து தந்தால் அச்சகத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு சீல் வைக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் விதிகளை மீறி பேனர் வைத்தால் ஓராண்டு சிறை என மாநகராட்சி ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனாலும் எச்சரிக்கையை மீறி பல இடங்களிலும் விதிகளை மீறி பேனர்கள் வைக்கப்படுகின்றன. இந்நிலையில் பேனர் விவகாரத்தில் விதிகளை மாநகராட்சி மேலும் இறுக்கியுள்ளது. அதன்படி சென்னையில் அனுமதிபெறாத பேனர்களை அச்சடித்து தந்தால் அச்சகத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு சீல் வைக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது

இது குறித்து அறிவிப்பு வெளியிட்ட சென்னை மாநகராட்சி,அனுமதி பெற்று பதாகைகள் அமைக்கிறார்களா என்பதை உறுதி செய்தே பதாகைகள் அச்சடிக்க வேண்டுமென்றும், அனுமதி பெறாமல் பதாகைகளை அமைப்போருக்கு அச்சடித்த பணியை மேற்கொண்ட அச்சகத்தின் உரிமம் ரத்தாகும். மேலும் அச்சகம் மூடி சீல் வைக்கப்படும் என மாநகராட்சி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close