[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

குடிபோதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து - வீட்டு வாசலில் அமர்ந்திருந்த பெண் உயிரிழப்பு!

accident-by-car-with-drunken-people-and-one-lady-died-in-madurai

மதுரையில் தாறுமாறாக ஓடிய கார் மோதி பெண் பரிதாபமாக உயிரிழந்தார். காரில் வந்தவர்கள் தப்பியோடிய நிலையில், அவர்களை  காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மதுரை ஆரப்பாளையம் அருகே புட்டுத்தோப்பு செக்கடி தெரு பகுதியில் உள்ள சாலையில் வந்த கார் ஒன்று திடீரென தாறுமாறாக ஓடி உள்ளது. இதனை கண்டதும் அந்த பகுதியில் உள்ள வீடுகளின் வாசல்களில் அமர்ந்திருந்த பொதுமக்கள் பதறியடித்து ஓடி உள்ளனர். 

இந்நிலையில் வீடு ஒன்றில் அமர்ந்திருந்த ரேணுகாதேவி என்ற பெண் மீது கார் வேகமாக மோதியுள்ளது. காரின் டயர் ஏறியதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்தார். தொடர்ந்து தாறுமாறாக ஓடிய காரானது, சுவர் ஒன்றின் மீது மோதி நின்றது. மது போதையில் காரை ஓட்டிவந்து விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் குமார் மற்றும் காரில் பயணம் செய்தவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். 

இதனையடுத்து காரில் வந்தவர்களை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்தபோக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடியவர்களை வாகன பதிவு எண்ணை கொண்டு தேடிவருகின்றனர். சில தினங்களுக்கு முன்பாக ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் கார் ஒன்றை குடிபோதையில் ஓட்டி தாறுமாறாக சென்றதால் ஏராளமானோர் காயமடைந்தனர். மதுரையில் அடுத்தடுத்து குடிபோதையில் கார் ஓட்டி விபத்துகள் ஏற்படுத்துவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இருசக்கர வாகனங்களில் செலுத்தப்படும் கவனம் போன்று, கார்களையும் சோதனையிட வேண்டும் என்பது மதுரை மக்களின் கோரிக்கையாக எழுந்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close