[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS பி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு
  • BREAKING-NEWS சென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

மாயமான மலேசிய விமானம்.. அறிவியல் ரீதியான விசாரணைகோரி வழக்கு..!

malaysia-flight-missing-case-filed-in-chennai-hc

ஐந்தாண்டுகளுக்கு முன் மலேசிய விமானம் மாயமானது தொடர்பாக, அறிவியல் ரீதியான விசாரணை நடத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த 2014 மார்ச் 8-ம் தேதி, மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து, சீன தலைநகர் பீஜிங் நோக்கி சென்ற மலேசிய போயிங் விமானம், 12 விமான ஊழியர்கள், 227 பயணிகள் என 339 பேருடன் காணாமல் போனது. அந்த விமானத்தின் கதி என்ன என்பது இன்று வரை மர்மமாகவே உள்ளது.

இந்நிலையில், கடந்த 2014 மார்ச் 8-ம் தேதி திருவனந்தபுரம் அந்தோணியார் கோவில் அருகில் இருந்தபோது, விமானம் ஒன்று கடலில் விழுந்ததைப் பார்த்தாகவும், விமானம் மாயமானது தொடர்பாக அறிவியல் ரீதியான விசாரணையை நடத்த உத்தரவிடக் கோரி, திருவனந்தபுரம் கழக் கூட்டத்தைச் சேர்ந்த பிஜு குமார் என்பவர் பொது நல மனு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், விமானம் விழுந்தது குறித்து கேரள மாநிலம் தும்பாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு (இஸ்ரோ) சென்று தகவல் தெரிவித்தபோது, ரேடார் மூலம் ஆய்வு செய்ததில் விமானம் அரபிக்கடலில் விழுந்தது குறித்து சரிவர தெரியவில்லை என்று இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அப்போதைய கேரள முதல்வர் அலுவலகத்திற்கும், மலேசியா விமான காவல் ஆணையத்திடமும், சென்னையில் உள்ள மலேசிய தூதரகத்திற்கும் தகவல் தெரிவித்தும், கடந்த ஐந்து ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், விமானம் காணாமல் போனது குறித்து அறிவியல் ரீதியிலான விசாரணையை நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார். இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close