[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

விரைவில் நாம் நிலவில் இருப்போம்: கமல்ஹாசன்

we-will-soon-be-on-the-moon-kamalhassan

’சந்திராயன் 2’ திட்டத்தில் ஏற்பட்டது தோல்விக்கு சமமான ஒன்றல்ல என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

முழுக்‌க முழுக்க இந்தியாவிலேயே தயாரான சந்திரயான் 2 விண்கலம், கடந்த ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் செலுத்தப் பட்டது. சுற்றுவட்டப்பாதையில் சரியாக சேர்ந்த சந்திரயான் 2-ன் விக்ரம் லேண்டர் விண்கலம், இன்று அதிகாலை நிலவில் தரையிறங்குவதென திட்டமிடப்பட்டிருந்தது. நிலவை நோக்கி பயணித்தது லேண்டர்.

தரையிறங்க 2.1 கிலோ மீட்டர் தொலைவே இருந்தபோது, அதிலிருந்து சிக்னல் கிடைக்காமல் போனது. விக்ரம் லேண்டரி லிருந்து எதிர்பார்த்தபடி சிக்னல் கிடைக்கவில்லை என்று, இஸ்ரோ தலைவர் சிவன் தழுதழுத்த குரலில் அறிவித்தார்.

இதையடுத்து, பிரதமர் மோடி, கடைசிவரை போராடிய விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்ததோடு, கடைசி நிமிட பின்னடைவு நிரந்தரமானது அல்ல என்‌றார். நிலவைத் தொடும் இந்தியாவின் முயற்சி நிச்சயமாக வெற்றிபெறும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பாராட்டுத் தெரிவித் துள்ளார். 

இதுபற்றி ட்விட்டரில் அவர், சந்திரயான் 2 திட்டத்தில் ஏற்பட்டது தோல்விக்கு சமமான ஒன்றல்ல. ஆராய்ச்சி மற்றும் அது தொடர்பான முன்னேற்றத்தில் விலைமதிப்பற்றக் கற்றலுக்கான தருணம் இது. நாம் விரைவில் நிலவில் இருப்போம். இஸ்ரோவுக்கு நன்றி. இந்த நாடு உங்களை நம்புகிறது, பாராட்டுகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close