[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

பாலத்தில் சடலம் இறக்கப்பட்ட சம்பவம்: சாதிப் பாகுபாடு இல்லையென தமிழக அரசு விளக்கம்

dalits-airdrop-body-for-cremation-tamilnadu-govt-said-no-caste-discremination-in-the-matter

வாணியம்பாடி அருகே சுடுகாட்டிற்கு பாதை இல்லாததால் பாலத்தில் இருந்து தொட்டில் கட்டி சடலம் கீழே இறக்கப்பட்ட சம்பவத்தில் சாதி பாகுபாடு எதுவும் இல்லையென தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சுடுகாட்டிற்குச் செல்ல பாதைகள் இல்லாததால், உயிரிழந்தவர் உடலை பாலாறு பாலத்திலிருந்து தொட்டில் கட்டி கீழே இறக்கி மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயனின் முறையீட்டை ஏற்று, உயர் நீதிமன்றம், தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் முன்பு விசாரணைக்கு வந்தது.  “வேலூர் நாராயணபுரம் கிராமத்தில் சாதி பாகுபாடு ஏதும் இல்லை. மயானத்திற்கு செல்லும் பாதை பட்டா நிலம் எனவும், அதன் உரிமையாளர்களிடம் கேட்டிருந்தால் அவர்கள் அனுமதித்திருப்பார்கள். மயானத்திற்கு செல்ல எவரும் அனுமதி மறுக்கவில்லை” என தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதனையடுது, ‘பிறகு ஏன் சடலத்தை பாலத்தில் இருந்து தொட்டில் கட்டி இறக்கி கொண்டு செல்லப்பட்டது?’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின்னர், வழக்கு விசாரணை நாளை தள்ளிவைக்கப்பட்டது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close