[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

‘தகாத உறவால் நேர்ந்த கொலை’ - கணவருக்கு மெசேஜ் அனுப்பிய நபர் கைது

illegal-relation-women-murdered-near-pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வாழைக்குறிச்சியில் பெண்ணை கொலை செய்து கண்மாயில் புதைத்தவர் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொன்னைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டிச்செல்வி. இவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். 100 நாள் வேலைக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற பாண்டிச்செல்வியை காணவில்லை என அவரது தந்தை பொன்னமராவதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

டி.எஸ்.பி. தமிழ்மாறன் தலைமையிலான காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பாண்டிச்செல்வியை தேடி வந்தனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் பாண்டிச்செல்வியின் கணவருக்கு வாட்ஸ்அப்பில் வாய்ஸ் மெசேஜ் ஒன்று வந்தது. அதில் பேசியவர் தனது பெயர் ரெங்கையா என்றும், பாண்டிச்செல்வியை தான் கொலை செய்துவிட்டதாகவும், அதற்காக தம்மை மன்னித்துவிடும்படியும் கூறியிருந்தார்.

அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பாண்டிச்செல்வியின் கணவர் தனது மாமனார் மூலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் ரெங்கையாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். தமக்கும் பாண்டிச்செல்விக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகக் கூறிய ரெங்கையா கொலைக்கான காரணத்தையும் காவல்துறையினரிடம் தெரிவித்தார்.

இதனையடுத்து ரெங்கையாவை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் வாழைக்குறிச்சி கண்மாயில் புதைக்கப்பட்டிருந்த பாண்டிச்செல்வியின் உடல் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு கூராய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close