[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

கொள்ளையர்களை அடித்து விரட்டிய தம்பதியை கெளரவித்த முதல்வர்

special-award-for-couple-who-fought-robbers

73ஆவது சுதந்திர தினத்தையொட்டி பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருது வழங்கி கவுரவித்தார்.

73ஆவது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டையில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் உரையாற்றிய முதலமைச்சர் சில திட்டங்கள் குறித்து பட்டியலிட்டார். சில அறிவிப்புகளையும் வெளியிட்டார். அதன்பின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருது வழங்கி கவுரவித்தார்.

சந்திரயான்2 உள்ளிட்ட முக்கிய விண்வெளி திட்டங்களில் சிறப்பாக பணியாற்றி இஸ்ரோ தலைவராக உயர்ந்த சிவனை கவுரவிக்கும் வகையில் அவருக்கு டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் விருது அறிவிக்கப்பட்டது. அவர் இன்று நேரில் வராததால் வேறொரு நாளில் விருது வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடலூர் மாவட்டத்தில் மீன்வளத்தை பாதிக்கும் சுருக்குமடி வலைகளின் பயன்பாட்டை துணிச்சலான ந‌டவடிக்கை மூலம் கட்டுப்படுத்திய மீன்வளத்துறை உதவி இயக்குநர் ரம்யா லட்சுமிக்கு துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருதினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். விருதுடன் 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 

நெல்லை மாவட்டம் கடையத்தில் கொள்ளையனை துணிச்சலுடன் எதிர்கொண்டு விரட்டி அடித்த சண்முகவேலு, செந்தாமரை தம்பதிக்கு அதீத துணிவுக்கான முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது. விருதுடன் 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் அவர்கள் பெற்றுக் கொண்டனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close