[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்

காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு - ஒருவர் கைது

child-harassment-happened-at-private-trust-hostel-one-person-arrested-by-pocso-in-madurai

மதுரை அருகே தனியார் காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை சமயநல்லூரில் செயல்பட்டு வரும் மாஷா என்ற டிரஸ்டின்கீழ் செயல்படும் காப்பகத்தில் 25 சிறுமிகள் தங்கி உள்ளனர். அந்த டிரஸ்ட்டில் உறுப்பினராக உள்ள கருமாத்தூரைச் சேர்ந்த ஆதிசிவன் என்பவர், காப்பகத்தில் தங்கியிருந்த 12 வயது முதல் 16 வயது வரை உள்ள சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்ததாக குழந்தைகள் நலக் குழு உறுப்பினர் சண்முகம் என்பவர் புகார் கொடுத்தார். 

புகாரின் அடிப்படையில் ஆதிசிவனை கைது செய்த சமயநல்லூர் அனைத்து மகளீர் காவல்துறையினர், அவர் மீது போக்சோ சட்டபிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும், பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்ததில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் முத்துபட்டியில் செயல்படும் அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close