[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

தகாத உறவிலிருந்த ஜோடி விஷம் அருந்தி தற்கொலை

illegal-relation-two-suicide-at-chennai

முறையற்ற தொடர்பு வைத்திருந்த ஈரோட்டைச் சேர்ந்த ஜோடி சென்னையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் புளியம்பட்டியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவருக்கு திருமணமாகி மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஜெயக்குமாருக்கு அதே பகுதியைச் சேர்ந்த கவிதாமணி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கவிதாமணிக்கு திருமணமாகி, கணவர் மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இருவரும் அவரவர் வாழ்க்கைத் துணையிடம் இருந்து பிரிந்து கடந்த மாதம் 22-ஆம் தேதியன்று யாரிடமும் சொல்லாமல் சென்னைக்கு புறப்பட்டு வந்து நெற்குன்றம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளனர்.

ஜெயக்குமாரின் மனைவியும், கவிதாமணியின் கணவரும் தங்கள் வாழ்க்கைத் துணையை காணவில்லை எனப் புகார் அளித்ததை அடுத்து, வழக்குப்பதிவு செய்த ஈரோடு காவல்துறையினர், ஜெயக்குமாரின் செல்போன் எண் டவரை வைத்து நெற்குன்றத்தில் இருப்பதை கண்டுபிடித்தனர். சென்னை வந்த ஈரோடு காவல்துறையினர் ஜெயக்குமாரை முதலில் பிடித்தனர். அவரிடம் கவிதாமணி குறித்து கேட்ட போது, சேலம் சென்றவர் கோயம்பேடு வந்து கொண்டிருப்பதாக காவல்துறையிடம் தெரிவித்தார்.

ஜெயக்குமாரை கோயம்பேடு அழைத்துச் சென்ற காவல்துறையினர் கவிதாமணியை அழைத்து வரச்சொல்லி விட்டு காத்திருந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து தாங்கள் மாட்டிக் கொண்டதை கவிதாமணியிடம் கூறிய ஜெயக்குமார், ஊரில் கேவலமாக பேசுவார்கள் என்பதால் விஷத்தை கவிதாமணிக்கு கொடுத்துவிட்டு தானும் அருந்தியுள்ளார்.

பின்னர் இருவரும், காத்திருந்த காவல்துறை வாகனத்தில் ஏறினர். வேன் ஈரோட்டுக்கு புறப்பட்ட சிறிது நேரத்தில் இருவரும் மயக்கம் அடைந்தனர். அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், இருவரையும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ஜெயக்குமாரும், கவிதாமணியும் இறந்து விட்டனர். இதுகுறித்து கோயம்பேடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close