[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்

“காங்கிரஸ் கட்சிக்கு மன்னிப்பே கிடையாது” - வைகோ ஆவேசம்..!

vaiko-comment-about-congress

திமுக தயவினால்தான் எம்.பி ஆனதாகவும், ஒரு இனத்தையே அளித்த பாவிகள் காங்கிரஸார் என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாக சாடினார்.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “திமுக எம்.எல்.ஏக்களும், திமுக தலைவர் ஸ்டாலினும் சேர்ந்து என்னை மாநிலங்களவைக்கு அனுப்பியுள்ளனர். காங்கிரஸ் தயவினால் என்றும் நான் எம்.எல்.ஏ-வாகவோ அல்லது எம்.பி-யாகவோ சென்றதில்லை. செல்லவும் மாட்டேன். காங்கிரஸினர் என்னை கோபப்பட்டு திட்டுவதாக இருந்தால், வேறு எதாவது சொல்லி திட்டிக்கொள்ளுங்கள். ஆனால் உங்களின் தயவால் சென்றேன் எனக் கூறாதீர்கள். 

நான் ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ உள்ளிட்ட திட்டங்களுக்கு எதிராக மோடியிடம் பேசினேன். காங்கிரஸார் 12 பேர் நாடாளுமன்றத்தில் ஓட்டுப் போடாமல் ஓடிவிட்டார்களே. அவர்கள் என்ன காசு வாங்கிவிட்டார்களா ? நான் மோடியிடம் பேசியபோது, சீனாவிலிருந்து வரும் ஆடைகள் குறித்து பேசினேன். தமிழக ஆடை தயாரிப்பாளர்களுக்காக பேசினேன். மோடியிடமே சென்று அவரது தவறை சுட்டிக்காட்டியவன் நான். ஆனால் இலங்கை தமிழர்களை படுகொலை செய்த பாவிகள் இந்த காங்கிரஸார். அவர்களுக்கு மன்னிப்பே கிடையாது” என்று ஆவேசமாக பேசினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close