[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS முன்ஜாமீன் கோரும் ப.சிதம்பரம் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வுக்கு தலைமை நீதிபதி பரிந்துரைக்க இருப்பதாக தகவல்
  • BREAKING-NEWS புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிட கூடாது என்ற உத்தரவு தொடரும்; தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS இன்று முதல் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS ரியோ பராலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற தீபா மாலிக் உள்ளிட்ட இருவருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு. ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 17 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு

பல வீடுகளை கொள்ளையடித்த 'மொட்டைமாடி' மைக்கேல் : போலீஸிடம் சொன்ன ரகசியம்..!

chennai-terrace-robber-tell-the-secret-to-police

சென்னையில் சிசிடிவி கேமராக்களில் சிக்காமல் காவல்துறையினருக்கே போக்குகாட்டி வந்த கொள்ளையன் பிடிபட்டுள்ளான்.

சென்னை கே.கே.நகரில் உள்ள வீட்டில் கடந்த ஜனவரி மாதம் பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. அப்பகுதியில் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, அதில் சென்னை கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த பழைய குற்றவாளியான மைக்கேலின் உருவம் பதிவாகியிருந்தது. ஆனால் அவர் அந்த வீட்டிற்கு எப்படி வந்தார், எந்த வழியாக தப்பிச் சென்றார் என்பது கேமராக்களில் பதிவாகவில்லை. அந்தக் குழப்பத்திற்கு இடையே விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மயிலாப்பூரில் உள்ள வீட்டில் மற்றொரு கொள்ளைச் சம்பவம் நடந்தது. 

கைரேகையை ஆய்வு செய்தபோது, அந்த வீட்டிலும் கைவரிசை காட்டியது மைக்கேல் தான் எனத் தெரியவந்தது. ஆனால் அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் மைக்கேலின் உருவம் பதிவாகவில்லை. கொள்ளையடிக்கும் வீடுகளுக்குள் மைக்கேல் எப்படி உள்ளே நுழைகிறார் என்பது அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சாகவே இருந்தது. இதையடுத்து தனிப்படை அமைத்து மைக்கேலை தேடிவந்த காவல்துறையினர், அவரை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே கைது செய்தனர். அவரிடம் மெல்ல பேச்சுக் கொடுத்த காவலர்கள், 'சிசிடிவி கேரமாவில் சிக்காமல் எப்படித்தான் நீ தப்பிக்கிறாய்?' என விசாரித்துள்ளனர். 

அதற்கு சுவாரஸ்யமாக பதிலளித்த மைக்கேல், ஒரு வழியாக தனது தொழில் ரகசியம் என்னவென்று தெரிவித்துள்ளார். அது, சென்னையின் பெரும்பாலான இடங்கள் சிசிடிவி கேமரா மயமாகிவிட்டன. எனவே, கொள்ளையடிக்கும்போது கேமராவில் தான் சிக்கிக் கொள்வோம் என்பதை நன்கு அறிந்து வைத்திருந்தார் மைக்கேல். இதனால், அவர் கொள்ளையடிக்க முடிவு செய்யும் வீட்டை 2 நாட்களுக்கு முன்னரே நன்கு நோட்டமிட்டு குறித்துக் கொள்வார். நள்ளிரவில் மட்டுமே களவில் இறங்கும் மைக்கேல், கொள்ளையடிக்க திட்டமிட்ட வீட்டிற்குள் நேரடியாக நுழையமாட்டார். சற்று தொலைவில் உள்ள வேறொரு வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று, அங்கிருந்து ஒவ்வொரு வீடாக தாவித் தாவி, கொள்ளையடிக்க திட்டமிட்ட வீட்டிற்குள் நுழைந்துவிடுவார். இதுவே தன்னுடைய பாணி எனக் கூறி, காவலர்களுக்கு திகைப்பை ஏற்படுத்தியுள்ளார். 

1994ஆம் ஆண்டில் இருந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் மைக்கேல் மீது 20க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. சிசிடிவியில் சிக்காமல், சத்தமின்றி கொள்ளைகளை அரங்கேற்றி வந்த மைக்கேலின் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது காவல்துறை. கால் நூற்றாண்டாக களவுத்தொழிலை கச்சிதமாகச் செய்துவந்த மைக்கேல், பல நாள் திருடன் ஒருநாள் பிடிபடுவான் என்ற பழமொழிக்கேற்ப காவல்துறையில் சிக்கிவிட்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close