[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

அத்திவரதரை காணவரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லை - ஸ்டாலின்

stalin-talks-about-aththivarathar-death-issue

அத்திவரதர் கூட்ட நெரிசலில் உயிரிழப்பு குறித்து சட்டப்பேரவையில் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 வருடங்களுக்குப் பின்னர் அத்தி வரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். 48 நாட்கள் அவர் காட்சியளிக்கவுள்ளார். இதனை தவறவிட்டால் மீண்டும் 40 வருடங்களுக்குப் பின்னர் தான் அத்தி வரதரை தரிசிக்க முடியும் என்பதால், நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இதனால் கூட்டம் அலை மோதுகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது கூட்ட நெரிசலில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், அத்திவரதர் வைபவத்தில் கூட்ட நெரிசலில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 31 பேர் மயக்கமடைந்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. பல லட்சம் பக்தர்கள் குவியும் பகுதியில் முறையான பாதுகாப்பு இல்லை என திமுக தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். மேலும் உயிரிழந்தவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  அத்திவரதர் வைபவத்தில் கூட்ட நெரிசலில் உயிரிழப்பு தொடர்பாக முழுவிவரம் கிடைத்தவுடன் அவையில் கூறப்படும் எனத் தெரிவித்தார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close