[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரான்ஸில் இன்று நடைபெறும் ஜி7 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
  • BREAKING-NEWS உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
  • BREAKING-NEWS லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண் உள்பட இருவர் கேரளாவில் கைது

பாலியல் வன்கொடுமையால் இரண்டு குழந்தைகளுக்கு தாயான சிறுமி !

one-held-for-raping-minor-girl-in-madurai

மதுரையில் இரண்டு பேரால் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி இரண்டு குழந்தைகளுக்கு தாயான கொடுமை அரங்கேறியுள்ளது. 

தந்தை காலமாகிவிட்டதால் சிறுமி தாய் வசந்தியுடன் வசித்து வந்துள்ளார். அவர்களது வீட்டிற்கு அருகிலிருந்த விஜயகுமார் என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசைகாட்டி சிறுமியை வன்கொடுமை செய்துள்ளார். இதற்கு சிறுமியின் தாய் வசந்தியும் உடந்தை எனத்தெரிகிறது.

இதன்காரணமாக சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தையை ஒரு லட்சம் ரூபாய்க்கு வசந்தி விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அழகு நிலையத்திற்கு வேலைக்குச் சென்ற சிறுமிக்கு வேலுச்சாமி என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. அவரும் திருமண ஆசை காட்டி சிறுமியை வன்கொடுமை செய்துள்ளார். இதனால் சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. 

இப்படி 13 வயது முதல் 17 வயது வரை 4 ஆண்டுகள் இரண்டு பேரால் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். பிறந்த குழந்தையை என்ன செய்வதென்று தெரியாமல் தோழியிடம் கொடுத்துவிட்டு சிறுமி சென்றுவிட, அவர் வசந்தியின் தந்தையிடம் சிசுவை ஒப்படைத்துள்ளார். அவர் பச்சிளங்குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசியதால் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

இதனையடுத்து சிறுமியின் தாய் வசந்தி, விஜயகுமார் மற்றும் வேலுச்சாமி மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வேலுச்சாமியை கைது செய்துள்ள காவல்துறையினர் மற்ற‌ இருவரையும் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரது பெண் குழந்தை தொட்டில் குழந்தை திட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close