[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

தேர்தல் வைப்பு தொகைக்காக மது பாட்டில்களை சேகரித்த விநோத மனிதர்

man-collect-tasmac-bottle-for-election-deposit

தேர்தலில் போட்டியிடுவதற்கான டெபாசிட் தொகை செலுத்த மது பாட்டில்களை சேகரித்த மது பிரியரால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஒரே ஒரு தொகுதியில் மட்டும் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் என்பதால் தமிழகம் முழுவதும் இருந்து சுயேச்சையாக பலர் வேலூர் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர். வேட்புமனுத்தாக்கல் கடந்த 11-ஆம் தேதி தொடங்கிய நிலையில் அன்றில் இருந்து சுயேச்சைகள் பலர் வித்தியாசமான முறையில் மனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவரான செல்லப்பாண்டியன் வேலூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இதற்காக வரும் திங்கள் கிழமை அவர் மனுத்தாக்கல் செய்கிறார். இந்த நிலையில் இவர், தேர்தலில் போட்டியிட செலுத்த வேண்டிய தொகையான ரூ.25 ஆயிரம் பணத்தை திரட்ட வேலூரில் மது பாட்டில் சேகரித்த சம்பவம் பார்ப்போரிடம் நகைப்பை ஏற்படுத்தியது. வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடை ஓரம் இன்று பாட்டில்களை சேகரித்தார்.

இவர் தனது வாக்குறுதியில், டாஸ்மாக் கடைகளில் அரசு தரமான மது விற்க வேண்டும், மதுவை உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும், ரெட் லைட் ஏரியா ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட வாக்குறுதிகளுடன் தேர்தல் களத்தை சந்திக்கிறார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close