[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

“கலைஞர் நினைவின்றி வைரமுத்துவால் இருக்க முடியாது” - ஸ்டாலின் பேச்சு 

dmk-chief-mk-stalin-released-vairamuthu-thamizhaatrupadai-book

வைரமுத்து எழுதிய தமிழாற்றுப்படை தமிழர்களுக்கான மிகப்பெரிய ஆயுதம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

கவிஞர் வைரமுத்து எழுதிய தமிழாற்றுப்படை நூல் வெளியிட்டு விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின், மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

      

திமுக தலைவர் ஸ்டாலின் நூலை வெளியிட ப.சிதம்பரம் பெற்றுக்கொண்டார். பின்னர், வாழ்த்துரையில் பேசிய ஸ்டாலின், “கலைஞரின் நினைவின்றி வைரமுத்துவால் இருக்க முடியாது. எத்தனை உயரத்திற்கு போனாலும் கலைஞர்தான் தன்னுடைய தமிழ் ஆசான் என்று கூறுவார். அரசியல் அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கலைஞர் கையில்தான் தன்னுடைய புத்தகம் வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் தன்னுடைய கருத்துக்களில் உறுதியாக இருப்பவர் கவிஞர். 

        

மூவாயிரம் ஆண்டுகள் தமிழ் மொழி சிறப்புற்றிருக்க காரணமாக இருந்த சான்றோர்களை பட்டிலிட்டு தொகுத்துள்ளார் வைரமுத்து. மிகச் சரியான நேரத்தில் இந்தப் புத்தகம் வெளியாகியுள்ளது, நமது மொழி பல எதிர்ப்புக்களை சந்தித்துக் கொண்டு இருக்கிறது. இந்தப் போரில் நமக்கு ஆயுதமாக தமிழாற்றுப்படை இருக்கும்” என்று கூறினார். 

           

ப.சிதம்பரம் பேசுகையில், “24 ஆளுமைகளுக்குப் பிறகு தெரிந்தும் தெரியாமலும், இருந்தும் இல்லாமலும், மறைந்தும் மறையாமலும் இருக்கின்ற 25 ஆவது ஆளுமை கவிப்பேரரசு வைரமுத்து” எனப் புகழ்ந்தார்.  

    

வைகோ பேசுகையில், “இந்தத் தமிழாற்றுப்படை நூல் முறையாக ஆங்கிலத்தில் மொழிப் பெயர்க்கப்பட்டால் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பு நிச்சயம் உண்டு. 3000 ஆண்டுக்கால தமிழ் ஆளுமைகளை ஆற்றுப்படுத்தி ஒரு நூலாக தந்திருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து” எனக் கூறியுள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close