[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

கோயம்பேட்டில் முதியவரை தாக்கி செல்போன் பறிப்பு - இருவர் கைது

two-youngsters-arrested-in-chennai-koyembedu-for-robbery

சென்னை கோயம்பேட்டில் முதியவரை தாக்கி செல்போன் மற்றும் பணம் பறித்த இரு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். 

சென்னை மதுரவாயல் அடுத்த நெற்குன்றம் சேர்ந்தவர் சைலேஷ்வரன் (70). இவர் பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு வேலை முடிந்து வீட்டிற்கு கோயம்பேடு வழியாக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சைலேஷ்வரனை சரமாரியாக தாக்கி விட்டு, அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.3,300 பணத்தை பறித்துச் சென்றனர். 

இதுகுறித்து சைலேஷ்வரன் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் கோயம்பேடு காவல்துறையினர் வழிப்பறி திருடர்களை தேடிவந்தனர். காவல்துறையினர் கோயம்பேடு அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்ட போது, இரு சக்கரவாகனத்தில் வந்த 2 வாலிபர்கள் தப்பியோட முயன்றனர்.

அவர்களை மடக்கி பிடித்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஒருவர் சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த பிரகாஷ் (20), மற்றொருவர் சென்னை பாடி குப்பத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (22) என்பதும் தெரியவந்தது. 

அத்துடன் இவர்கள்தான் கோயம்பேட்டில் முதியவரை தாக்கி செல்போன் மற்றும் பணத்தை பறித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close