[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

ஒரே புடவையில் கணவனும் மனைவியும் தூக்கிட்டு தற்கொலை

husband-and-wife-suicide-in-single-saree-near-chennai

செங்குன்றம் பகுதியில் குடும்ப பிரச்னையால் கணவன், மனைவி இருவரும் ஒரே புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை செங்குன்றம் ஜிஎன்டி சாலை அருகே சாமியார் மடம் என்ற பகுதியில் வசித்து வந்தவர் மதன் (38). இவர் டாட்டா ஏஸ் வாகனத்தை வாடகைக்கு விட்டு அதன் மூலம் தொழில் செய்து வந்துள்ளார். அவருடைய மனைவி கௌசல்யா (35). இவர்களுக்கு கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தேறி, வெற்றிமாறன் என்ற 9 வயது மகனும் பிரவீனா என்ற 7 வயது மகளும் உள்ளனர். இவர்கள் அருகிலுள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.

“ராஜீவ் காந்தியின் இரத்தத்தை பார்த்தவன் நான்” - கராத்தே தியாகராஜன்   

கணவன்-மனைவி இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை ஏற்படுவதாக கூறப்படுறது. இந்த நிலையில் குழந்தைகள் இருவரும் நேற்று பள்ளி சென்று வீடு திரும்பியபோது வீடு உட்புறமாக தாழிடப்பட்டிருக்கிறது. குழந்தைகள் பலமுறை கதவைத் தட்டியும் யாரும் திறக்கவில்லலை. இதனையடுத்து குழந்தைகள் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்துள்ளனர். அங்கு அப்பா- அம்மா இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து குழந்தைகள் அலறியடித்துக் கொண்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்களிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் மூலம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்குவந்த காவல்துறையினர் இருவரின் சடலங்களையும் மீட்டு உடற்கூராய்வுக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக செங்குன்றம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்றோரின் ஒரு நிமிட விபரீத முடிவால் தற்போது குழந்தைகள் ஆதரவின்றி நிற்கதியாக நிற்கின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close