[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

இன்றைய முக்கியச் செய்திகள்..!

today-top-news-19062019

ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் இன்று விவாதம் நடைபெறுகிறது. கூட்டத்தில் பங்கேற்பது குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று காலை முடிவு செய்கின்றன.

மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா இன்று தேர்ந்தெடுக்கப்படுகிறார். ‌காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக் கட்சிகளும் ‌ஆதரவு‌ தெரிவித்துள்ளன.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி எம்பிக்கள் மக்களவையில் தமிழிலேயே பதவியேற்றனர். தமிழையும் பெரியாரையும் வாழ்த்திக் குரல்கள் ஓங்கி ஒலித்தன.

தண்ணீர்ப் பிரச்னை தொடர்பாக ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். நீர் மேலாண்மை விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்த நிலையில், அவசரக் கூட்டம் நடைபெறுகிறது.

தமிழகத்தின் 15-வது மாநகராட்சியானது ஆவடி. அவசர சட்டம் பிறப்பித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close