[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற கூட்டத் தொடர் நீட்டிப்பு? - மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS தோனியிடம் தேர்வுக்குழு பேச வேண்டும்: ஓய்வு விவகாரம் பற்றி சேவாக்!
  • BREAKING-NEWS கடத்தப்பட்ட குழந்தை '10 மணி' நேரத்தில் மீட்பு - வீட்டு பணிப்பெண் காதலனுடன் கைது
  • BREAKING-NEWS டி.என்.பி.எல். தொடர் இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS விடிய விடிய தர்ணா - கர்நாடக சட்டப்பேரவையில் படுத்துறங்கிய எடியூரப்பா

நிற்காமல் சென்ற பைக் மீது போலீசார் லத்தியை வீசியதாக புகார்... இளைஞர் உயிரிழப்பு

youth-complaint-on-police-in-madurai

வாகன சோதனையின்போது நிற்காமல் சென்ற இருசக்கர வாகனம் மீது போலீசார் லத்தியை வீசியதால் இளைஞர் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது.

மதுரையை சேர்ந்தவர் விவேகானந்த குமார். வயது 35. இவரது கடையில் வேலை செய்பவர் சரவணக்குமார். இருவரும் நேற்று முன்தினம் வைகை ஆற்றுப் பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகன சோதனைக்காக நின்றிருந்த போலீசார், இருவரும் சென்ற மோட்டார் சைக்கிளை மறித்துள்ளனர். ஆனால் இவர்கள் நிற்காமல் தொடர்ந்து சென்றுள்ளனர்.

இதனால் போலீசார் தாங்கள் வைத்திருந்த லத்தியை இருசக்க வாகனத்தின் மீது எறிந்ததாக கூறப்படுகிறது. இதனால் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்துள்ளனர். இதனைடுத்து இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் விவேகானந்த குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து விவேகானந்த குமாரின் உறவினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனிடையே இருசக்கர வாகனத்தில் சென்ற மற்றொரு நபரான சரவணக் குமார் இதுகுறித்து மதுரை மாநகர போலீஸ் கமிஷ்னரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close