[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற கூட்டத் தொடர் நீட்டிப்பு? - மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS தோனியிடம் தேர்வுக்குழு பேச வேண்டும்: ஓய்வு விவகாரம் பற்றி சேவாக்!
  • BREAKING-NEWS கடத்தப்பட்ட குழந்தை '10 மணி' நேரத்தில் மீட்பு - வீட்டு பணிப்பெண் காதலனுடன் கைது
  • BREAKING-NEWS டி.என்.பி.எல். தொடர் இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS விடிய விடிய தர்ணா - கர்நாடக சட்டப்பேரவையில் படுத்துறங்கிய எடியூரப்பா

“60 மாணவர்களுக்கு 1 ஆசிரியர்”- தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பு

tamilnadu-teacher-association-opposed-for-teacher-student-ration

60 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாச்சாரம் மாணவர்களின் கற்றல் திறனை கடுமையாக பாதிக்கும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்  மாநிலத் தலைவர் இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் 60 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என் விகிதாச்சாரம் கற்பித்தல் மற்றும் மாணவர்களின் கற்றல் திறனை பாதிக்கும் எனக் கூறியுள்ளார். ஒரு வகுப்பறையில் 60 மாணவர்கள் இருக்க வேண்டுமென்பது இட நெருக்கடிக்கு மட்டுமின்றி, ஆரோக்கியமான சூழலில்லாமல் மாணவர்களுக்கு ஒருவித இறுக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் இஷ்டப்பட்டு செய்யும் கற்பித்தல்- கற்றல் கஷ்டப்பட்டு நடக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடப்புத்தகங்களை சிறப்பாக அமைத்துவிட்டு அதனை எடுத்துச் செல்லும் வழி சரியாக இல்லாவிட்டால் அது பயனற்றுப் போகும். பாடங்களை எளிமையாக எடுத்துச் செல்ல மாணவர்கள்- ஆசிரியர்கள் விகிதாச்சாரங்களை குறைத்தால் மட்டுமே சிறப்பானதாக இருக்கும். எனவே இதுகுறித்து அமைச்சர் உரிய நடடிகக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close