[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

தங்கையை கத்தியால் குத்திக் கொலை செய்த சகோதரர்

brother-killed-his-sister-near-trichy

திருச்சியில் பொறியியல் கல்லூரி மாணவி ஒருவர், தனது சகோதரராலேயே கத்தியால் குத்தி கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் உறையூர் அண்டக்கொண்டானைச் சேர்ந்த ஐயப்பன் என்பவரின் மகள் மலர்விழி மீரா. இவர் திருச்சி - புதுக்கோட்டை சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார். வழக்கம்போல நேற்று கல்லூரி முடிந்து வீடு திரும்பினார் மலர்விழி. குடியிருப்புகளின் மத்தியில் நடந்து வந்தபோது, மலர்விழியின் பெரியப்பா மகனான முரளி திடீரென வழிமறித்ததாக கூறப்படுகிறது.

பின்னர் தான் வைத்திருந்த கத்தியால், மாணவியை சரமாரியாக குத்தியுள்ளார் முரளி. இதில் ரத்தவெள்ளத்தில் சரிந்த மலர்விழி, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதனிடையே, மலர்விழியை கத்தியால் குத்திய முரளியை சூழ்ந்து கொண்ட மக்கள், அவரைத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமுற்ற முரளி திருச்சி அரசுப் பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனினும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close