[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பிகில் திரைப்பட வெளியீட்டிற்கு தடை கோரிய வழக்கு. இன்று உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்

chances-to-fall-rain-in-chennai-for-two-days-chennai-met

சென்னையில் வெயில் வாட்டி வந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக இரண்டு நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கத்தாலும், மழையின்மையாலும் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் தண்ணீருக்காக மக்கள் தெருத்தெருவாக அழைந்து வருகின்றனர். இதனால் மழை பொழிவை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் சென்னையில் வெப்பச்சலனம் காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு தினங்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதேசமயம் இன்று அனல் காற்று வீசும் என்றும், 15ஆம் தேதிக்குப் பிறகு தமிழகம் முழுவதும் வெப்பத்தின் அளவு குறையும் என்றும் சென்னை வானிலை தெரிவித்துள்ளது. இதற்கிடையே தென்மேற்கு பருவ மழையின் எதிரொலியாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். விழுப்புரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. திண்டிவனம், மரக்காணம், வானூர் ஆகிய பகுதிகளில் பெய்த மழையால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

புதுக்கோட்டை மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அன்னவாசல், இலுப்பூர், கந்தர்வக்கோட்டை, மங்கனூர், திருவரங்குளம், திருக்கட்டளை ஆகிய இடங்களில் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். கொடைக்கானலில் சுமார் ஒரு மணி நேரமாக பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி காணப்பட்டது. தமிழக- கேரள எல்லைப்பகுதியான குமுளி, தேக்கடியில் ஆறாவது நாளாக சாரல் மழை பெய்தது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close