[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

மாணவர்களை விரட்டிக்கடித்த குரங்கு : பள்ளிக்கு அரைநாள் ‘லீவ்’

monkey-attack-school-students-in-kanchipuram

மேல்மருவத்தூர் அருகே அரசுப் பள்ளியில் குரங்கு ஒன்று புகுந்து மாணவர்களை கடித்ததால் அரை நாள் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே உள்ள சோத்துப்பாக்கத்தில் அரசினர் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி வழக்கம்போல நேற்று இயங்கிக் கொண்டிருந்தது. பிற்பகல் மூன்று மணியளவில் பள்ளி வளாகத்திற்குள் குரங்கு ஒன்று புகுந்தது. மரத்தின் மேல் நின்றுகொண்டிருந்த குரங்கை மாணவர்கள் வியப்புடன் கண்டுகொண்டிருந்தனர். 

அப்போது சிவப்பு நிறம் கலந்த பள்ளி சீருடையை அணிந்திருந்த மாணவர்கள் மீது திடீரென வெறி பிடித்தது போல அக்குரங்கு பாய்ந்தது. அத்துடன் இரண்டு மாணவர்களையும் கடித்துவிட்டது. இதனால் மாணவர்கள் அங்கிருந்து அலறி ஓடினர். பின்னர் அரை மணி நேரத்தில் மாணவர்கள் பள்ளி நேரம் முடிந்து வீட்டிற்கு சென்றுவிட்டனர். 

இன்று மீண்டும் வழக்கம் போல பள்ளி நடைபெற்றுக்கொண்டிருக்க, காலை சுமார் 11.30 மணியளவில் மீண்டும் பள்ளிக்குள் புகுந்து மாணவர்களை விரட்டியுள்ளது. பயந்து ஓடிய மாணவர்கள் ஆசிரியர்களிடம் கூற, அவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

பள்ளிக்கு வந்த வனத்துறையினர் குரங்கை பிடிக்க வலை விரித்துள்ளனர். மேலும், குரங்கை பிடிக்கும் போது கோபத்தில் குரங்கு மாணவர்களை தாக்கி அசம்பாவிதம் நடக்க வாய்ப்புள்ளதாக அறிவுறுத்தியுள்ளனர். இதனால் ஆசிரியர்கள் பள்ளிக்கு அரை நாள் விடுமுறை விட்டனர். பின்னர் குரங்கை மடக்கிய வனத்துறையினர், அதை லாவகமாக பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு சென்றுவிட்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close