[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

“மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலம் தரவில்லை” - மத்திய அரசு

the-state-government-has-not-handed-over-the-land-to-the-aiims-hospital-in-madurai-rti

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மாநில அரசு இதுவரை நிலத்தை ஒப்படைக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் ஆயிரத்து 264 கோடி ரூபாய் செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து கடந்த ஆண்டு பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்காக பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். 

இந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்டது. அதற்கு தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மாநில அரசு இதுவரை நிலத்தை ஒப்படைக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்ட அறிக்கை இதுவரை தயாரிக்கப்படவில்லை என்றும் பதில் அளித்துள்ளது.

Image result for aiims madurai

மாநில அரசு இதுவரை நிலத்தை ஒப்படைக்கவில்லை என மத்திய அரசு கூறி இருப்பது குறித்து மாநில சுகாதாரத்துறையை தொடர்பு கொண்டது புதிய தலைமுறை. இதற்கு, வரும் 10ஆம் தேதி எய்ம்ஸ் குழுவினர் தமிழகம் வருகை தர இருப்பதாகவும், அன்றைய தினம் தோப்பூரில் அவர்கள் ஆய்வு செய்ய இருப்பதாகவும் சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது. அந்த ஆய்வு முடிந்த பிறகு நிலம் ஒப்படைப்புக்கான பணிகள் தொடங்கப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close