[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது டெல்லி தனியார் ஓட்டலில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்குகிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு
  • BREAKING-NEWS அறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா
  • BREAKING-NEWS தனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி

சிக்கன் பக்கோடாவில் விஷம் : நாயுடன் சேர்ந்து உயிரிழந்த 8 பூனைகள் 

8-cats-who-died-along-with-the-dog-with-the-poisoned-has-eaten-in-chennai

சென்னை திருவொற்றியூரில் தெரு நாய் தொல்லையை தவிர்ப்பதற்காக வைக்கப்பட்ட விஷத்தை தின்ற நாயும், 8 பூனைகளும் உயிரிழந்துள்ளன. வாயில்லாத ஜீவன்களை மிகுந்த மரியாதையுடன் அப்பகுதி மக்கள் அடக்கம் செய்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவொற்றியூர் முனுசாமி தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார். 45 வயதான இவர் கார்பெண்டர் வேலை பார்த்து வருகிறார். இவர் வசிக்கும் பகுதியில், தெரு நாய் ஒன்று, விஜயகுமாரை நாள்தோறும் குரைத்து தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், நாயை விஷம் வைத்து கொல்ல தீர்மானித்தார். இதற்காக சிக்கன் பக்கோடாவை வாங்கிய அவர், அதில் மயில் துத்தம் எனும் விஷத்தை கலந்து தெரு நாய்க்கு வைத்துள்ளார். 

இதனைத்தொடர்ந்து விஷம் கலந்த சிக்கன் பக்கோடாவை சாப்பிட்ட அந்த நாய் உயிரிழந்தது. மேலும், அதன் அருகே 8 பூனைகளும் சில எலிகளும் இறந்து கிடந்தன. பூனைகளும் விஷம் கலந்த சிக்கன் பக்கோடாவை சாப்பிட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. வாயில்லா ஜீவன்கள் உயிரிழந்ததை அறிந்த அப்பகுதி மக்கள் சோகத்தில் கண்ணீர் வடித்தனர். சொந்த உறவினர்கள் உயிரிழந்தது போல, சில பெண்கள் கதறி அழுதனர். இதையடுத்து மனிதர்களுக்கு செய்யும் ஈம சடங்குகள் போல, இறந்த பிராணிகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதனிடையே நாய்க்கு விஷம் வைத்தது தொடர்பாக விஜயகுமாரை திருவொற்றியூர் போலீஸார் கைது செய்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close