[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளி‌யீடு

neet-exam-results-announced-today

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வின் முடிவுகள் இன்று வெளியாகின்றன.

நாடு முழுவதும் 2019-2020 ஆம் கல்வி ஆண்டுக்கான மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு, கடும் சோதனை மற்றும் கட்டுப்பாடுகளுடன் கடந்த மாதம் 5-ஆம் தேதி நடைபெற்றது. ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்தில் மட்டும் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு‌‌, பின்னர் 20-ஆம் தேதி நடத்தப்பட்டது. இதில் தேர்வுக்கு விண்ணப்பித்த 15 லட்சத்து 19 ஆயிரத்து 3‌75 பேரில், 14 லட்சத்து 10 ஆயிரத்து 754 பேர் மட்டுமே தேர்வெழுதினர்.

இதனைத்தொடர்ந்து, நீட் தேர்வு முடிவுகள் இன்று www.nta.ac.in , www.ntaneet.nic ஆகிய இணையதளங்களில் வெளியிடப்படவுள்ளன. ஒடிசா மாநிலத்தில் நீட் தேர்வு தாமதமாக நடத்தப்பட்டதால் அம்மாநிலத்துக்கான தேர்வு முடிவுகளும் இன்று வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close