[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியே இருக்கணும் ! தீக்குளிக்க முயன்ற தொண்டர்கள்

congress-cadres-wants-rahul-gandhi-continue-as-leader

காங்கிரஸ் கட்சியின் தலைவராக தொடர்ந்து ராகுல்காந்தியே இருக்க வலியுறுத்தி சென்னையில் தொண்டர்கள் இருவர் தீக்குளிக்க முயன்றனர்.

சென்னை, அண்ணாசாலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற பேரணியில், காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர், குமரி அனந்தன், கே.ஆர்.ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மக்களைவைத் தேர்தல் தோல்விக்கு, ராகுல்காந்தி தார்மீகப் பொறுப்பெற்றுக் கொண்டு விலகுவதாக சொல்லியிருப்பது வேதனை அளிப்பதாகவும், ராகுல்காந்தியே தலைவராக தொடரவேண்டும் என்றும் காங்கிரஸ் கமிட்டியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது, காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தியே தொடர வலியுறுத்தி தொண்டர்கள் இருவர் தங்களது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். பின்னர் அவர்களை சக தொண்டர்கள் தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியே தொடர வேண்டும் என கோடான கோடி தொண்டர்கள் விரும்புவதாக தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close