[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்

ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் ஊர்வலம்.. தலைவர்கள் நினைவிடங்களில் அஞ்சலி..!

mk-stalin-prayers-at-karunanidhi-memorial

மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் ஊர்வலமாகச் சென்று தலைவர்கள் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினர்.

நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பெற்ற வெற்றியை தலைவர்களுக்கு சமர்ப்பிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. உழைப்பாளர் சிலையிலிருந்து மெரினா கடற்கரை வரை நடந்த பேரணியில் திமுக தலைவர் ஸ்டாலினுடன், கனிமொழி, ஆ.ராசா, தயாநிதிமாறன் உள்ளிட்ட மக்களவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

 தொடர்ந்து அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அப்போது திமுகவினர் வெற்றி முழக்கமிட்டு மரியாதை செலுத்தினர். பின்னர், பெரியார் நினைவிடத்திற்குச் சென்ற ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர், அங்கும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதற்கிடையில் இன்று மாலை திமுக எம்.பிக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெற்றது. இதேபோல 22 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களில் வெற்றி கண்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close