[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 10 காசு குறைந்து ரூ.4.08ஆக நிர்ணயம்
  • BREAKING-NEWS 2013-2017 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நவ.24 முதல் 29ஆம் தேதி வரை மாவட்ட அமமுக அலுவலகங்களில் விருப்பமனு அளிக்கலாம் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS கோவையில் இளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதும் இல்லை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
  • BREAKING-NEWS எஸ்பிஜி பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • BREAKING-NEWS இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்; மகாராஷ்டிரா முதல் இடம் - மத்திய அரசு
  • BREAKING-NEWS சிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது - நிதின் கட்கரி

“ஸ்கூல் பேக், லஞ்ச் பேக் வாங்க வற்புறுத்தக் கூடாது” - நீதிமன்றம் உத்தரவு

chennai-high-court-ordered-to-tn-schools

ஸ்கூல் பேக், லஞ்ச் பேக் போன்ற பொருட்களை வாங்கும்படி பெற்றோர்களை பள்ளி நிர்வாகங்கள் வற்புறுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையில் உள்ள மாதா அமிர்தானந்த மயி அறக்கட்டளைக்கு சொந்தமான பள்ளி நிர்வாகம், பாடப் புத்தகங்களுக்கு 5000 ரூபாயும், சீருடைகள், காலணிகள், புத்தகப் பை, மதிய உணவு எடுத்துச் செல்வதற்கான பைகளுக்கு 5000 ரூபாயும் செலுத்தக்கூறி சுற்றறிக்கை வெளியிட்டது. இதை எதிர்த்து மாணவர்களின் பெற்றோரான ஹேமலதா உள்ளிட்ட இருவர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தபோது, தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பரிந்துரைத்த 450 ரூபாய் விலை கொண்ட புத்தகங்களுக்கு பதிலாக, 5,000 ரூபாய் விலையுடைய ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் புத்தகங்களை பள்ளி நிர்வாகங்கள் வழங்குவதால், நடுத்தர பெற்றோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை கேட்ட நீதிபதி, மாணவர்களுக்கு தேவையான பாடப் புத்தகங்கள், சீருடைகள், காலணிகளை விற்கலாம். ஆனால், பிற பொருட்களை வாங்கும்படி பெற்றோரை நிர்பந்திக்க கூடாது என உத்தரவிட்டார். பின்னர், இந்த வழக்கின் விசாரணையை ஜூன் 10-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close