[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS சிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி மனு
  • BREAKING-NEWS மருத்துவர்கள், மருத்துவ துறையை சேர்ந்தவர்களை பாதுகாக்க சட்டப்பேரவையில் தனியாக சட்டம் இயற்றுக - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம்
  • BREAKING-NEWS அனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்; சவாலாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் உதயகுமார்

கணவர் இழப்பை தாங்க முடியாமல் தூக்கிட்டு கொண்ட கர்ப்பிணி பெண் 

a-pregnant-woman-committed-suicide-for-her-husband-s-loss-in-chennai

போரூர் அருகே கணவர் இறந்த துக்கத்தில் 8 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை போரூர் அடுத்த காரம்பாக்கம் பகுதியை சேர்ந்த பிரவீன் குமார் - இளந்தென்றல் தம்பதியினர். இளந்தென்றல் 8 மாத கர்ப்பிணி பெண். இந்நிலையில் நேற்று வீட்டிலுள்ள அறைக்குள் சென்ற இளந்தென்றல் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது மாமனார் ரவி கதவைத் தட்டியுள்ளார். கதவு திறக்காததால் அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, கர்ப்பிணிப் பெண்ணான இளந்தென்றல் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

Related image

இதையடுத்து அவரைக் கீழே இறக்கி 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்சில் வந்த மருத்துவர்கள் பரிசோதித்த போது இளந்தென்றல் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வளசரவாக்கம் போலீசாருக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் வளசரவாக்கம் காவல் ஆய்வாளர் செல்வராஜ், சம்பவ இடத்திற்குச் சென்று இறந்து போன இளந்தென்றல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். 

Image result for pregnant woman suicide

மேற்கொண்டு விசாரணையில், கல்லூரியில் படிக்கும் போது பிரவீனும் இளந்தென்றலும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்றும் கடந்த மாதம் 18 ஆம் தேதி நடந்த சாலை விபத்தில் இவரது கணவர் பிரவீன்குமார் இறந்து போனார் என்றும் தெரிய வந்துள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த இளந்தென்றல் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. 

கணவர் இறந்த துக்கம் தாங்காமல் 8 மாத கர்ப்பிணி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close