[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

பாலியல் தொழிலாளியிடம் பணம், நகை பறித்த காவலர்கள் கைது !

a-police-has-grabbed-money-and-jewelry-from-sex-worker-in-chennai

சென்னை அருகே பாலியல் தொழிலாளியிடம் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த இரண்டு ஆயுதப்படை காவலர்களைப் பிடித்து பாதிக்கப்பட்ட பெண்ணே காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

தமிழக அரசின் 7ஆவது பட்டாலியனில் காவலராக உள்ள சார்லஸ் வேளாங்கண்ணி என்பவரும் 29 ஆவது பட்டாலியனில் காவலராக உள்ள மோகன் என்பவரும் இணைந்து பாலியல் தொழிலாளிகளிடம் செல்ல முடிவு செய்துள்ளனர். இவர்களுக்கு ராஜேந்திரன் என்பவர் உதவி செய்துள்ளார். அவர் பாலியல் தொழிலாளிகளிடம் செல்ல ஆன்லைனில் பெண்களைத் தேடியுள்ளார். 

Related image

பூவிருந்தவல்லியில் பாலியல் தொழிலாளிகளை கண்டறிந்து ஆன்லைன் மூலமே 20 ஆயிரம் பணம் செலுத்தியுள்ளனர். ஆனால், காவலர்கள் உடனே செல்லாமல் சில மாதம் கழித்து பூவிருந்தவல்லியில் உள்ள கீழ்மா நகருக்கு சென்ற இருவரும், அங்கிருந்த பெண்ணிடம் தாங்கள் பாலியல் தொழில் தடுப்புப் பிரிவு காவலர்கள் எனக் கூறி 14 சவரன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

இந்நிலையில் நகை மற்றும் பணத்தை இழந்த அந்த பெண், பூவிருந்தவல்லி பேருந்து நிலையம் அருகே அந்தக் காவலர்களைப் பார்த்துள்ளார். உடனே பொது மக்கள் உதவியோடு அவர்களைப் பிடித்து பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் பெண் ஒப்படைத்துள்ளார். பூவிருந்தவல்லியில் பாலியல் தொழில் நடைபெறுவது வெளியானதாலும், போலிசார் இந்த செயலில் ஈடுபட்டதாலும் இந்த வழக்கில் விசாரணை துவக்குவதில் காவல் துறையினர் தாமதம் காட்டினர். பின்னர் வேறு வழியின்றி வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர். மேலும் மூவரையும் பூவிருந்தவல்லி நீதிமண்டத்தில் ஆஜர் செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close