[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது
  • BREAKING-NEWS குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு
  • BREAKING-NEWS ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

பெட்ரோலில் கலப்படம் இருப்பதாக வாடிக்கையாளர்கள் போராட்டம்

adulteration-in-petrol-customers-protest

பெட்ரோலில் கலப்படம் இருப்பதாக கூறி தாளவாடியில் வாடிக்கையாளர்கள் பெட்ரோல் பங்கை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி நகர் பகுதியில் ஓசூர் சாலையில் சுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் பங்கில் இருச்சக்கர வாகனங்களில் பெட்ரோல் நிரப்பிய வாகன ஓட்டிகள் சிறிது தூரம் சென்றதும் வாகனம் இயங்காமல் என்ஜினில் அடைப்பு ஏற்பட்டு நின்றதால் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து இருச்சக்கர வாகனம் பழுது பார்ப்பவர்களிடம் கேட்டபோது பெட்ரோல் நிறம் சற்று மாறி உள்ளதால் கலப்படம் இருக்கலாம் எனக் கூறியதால் ஆத்திரமடைந்த வாகன ஓட்டிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வியாழக்கிழமை பெட்ரோல் பங்க்கை முற்றுகையிட்டு, ‘கலப்படம் செய்யப்பட்ட பெட்ரோல் விற்பனை செய்து வருகிறீர்களா’ எனக் கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாளவாடி போலீசார் விசாரித்தபோது  பெட்ரோல் பங்கிற்கு பெட்ரோல் டேங்கர் லாரி லோடு வந்ததாகவும் அப்போது தரைமட்ட டேங்கில் பெட்ரோல் நிரப்பிய பிறகு இருச்சக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் அடித்ததாக பெட்ரோல் பங்க் ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் வாகனங்களுக்கு பெட்ரோல் அடிப்பதை நிறுத்தி வைக்குமாறும், இதுகுறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட பெட்ரோலிய நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்து சோதனை செய்து பின்னர் பெட்ரோல் நிரப்பும் பணியை தொடருமாறும் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் கூறிவிட்டு வாகன ஓட்டிகளை சமாதானப்படுத்தினர்.

இதையடுத்து வாகன ஓட்டிகள் போராட்டத்தை கைவிட்டு திரும்பிச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் கேட்டபோது கடந்த இரண்டு தினங்களாக மழை பெய்து வருவதால் தரைமட்டத்தில் இருக்கும் பெட்ரோல் டேங்கரில்  மழை தண்ணீர் புகுந்து விட்டதா என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் இது குறித்து பெட்ரோலிய நிறுவனத்திற்கு தகவல் அளித்துள்ளதாக தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close