[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

காணொளி காட்சி மூலம் பதிலளிக்க சசிகலாவுக்கு அனுமதி

madras-high-court-allow-sasikala-to-appear-on-video-call

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் நீதிபதியின் கேள்விக்கு காணொளி காட்சி மூலம் பதிலளிக்க சசிகலாவுக்கு அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தனியார் தொலைக்காட்சிக்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கியதில் அன்னிய செலாவணி மோசடியி்ல் ஈடுபட்டதாக வி.கே.சசிகலா மற்றும் அவரது  உறவினர் பாஸ்கரன் மீது அமலாக்கத் துறையினர் 1996-ல் வழக்குப்பதிவு செய்தனர். சென்னை எழும்பூர் முதலாவது பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில், சசிகலா, பாஸ்கரன் இரண்டு பேர் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

தற்போது, அமலாக்கத்துறை தரப்பு சாட்சிகள் விசாரணை முடிவடைந்ததை அடுத்து, குற்ற விசாரணை முறைச் சட்டம் 313-வது பிரிவின் கீழ், சாட்சிகள் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் குற்றம்சாட்டவர்களிடம் கேள்விகளைக் கேட்டு பதிலை பதிவு செய்ய, பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை மே 13-ம் தேதி நேரில் ஆஜர்படுத்த சிறை நிர்வாகத்திற்கு எழும்பூர் முதலாவது பொருளாதார குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை ரத்து செய்து, காணொளி காட்சி மூலம் நீதிபதியின் கேள்விகளுக்கு பதிலளிக்க அனுமதி கோரி சசிகலா தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, ஏற்கெனவே இதே வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, காணொளி காட்சி மூலம் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதாகவும், மருத்துவ காரணங்களுக்காக இம்முறையும் அதே வசதியை வழங்க வேண்டும் என சசிகலா தரப்பில் வாதிடப்பட்டது.

சசிகலா காணொளி காட்சி மூலம் ஆஜராவதற்கு எந்த ஆட்சேபமும் இல்லை. ஆனால் பதில்கள் பதிவு செய்யப்பட்ட ஆவணத்தில் அவரது கையெழுத்து பெற வேண்டியுள்ளது என அமலாக்கப் பிரிவு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, காணொளி காட்சி மூலம் ஆஜராகி, நீதிபதியின் கேள்விகளுக்குப் பதிலளிக்க அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டார். பதில்கள் அடங்கிய கோப்பை பெங்களூரு சிறைக்கு அனுப்பி, காணொளி காட்சியின் போது இருந்த அதிகாரி முன்னிலையில் அவரது கையெழுத்தை பெறவும் உத்தரவிட்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close