[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வரும்காலத்தில் சிறுபான்மை மக்களுக்கு பாஜக அரசு பாதுகாப்பாக இருக்கும் என மோடி பேசியது ஆறுதல்- திருமாவளவன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS 5 ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும் என்பதால் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார்- திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்
  • BREAKING-NEWS காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த தமிழக அரசு முடிவு
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்

வீராங்கனை வீட்டில் கொள்ளையடித்தவர் மெரினாவில் கைது

robbery-man-arrested-in-chennai

சென்னை சாந்தோமில் விளையாட்டு வீராங்கனை வீட்டில் லேப்டாப், செல்போனை கொள்ளையடித்த பலே திருடனை மெரினாவில் உள்ள மீனவர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர் உடம்பில் உள்ள காயத்தழும்பு அவரை போலீசுக்கு அடையாளம் காட்டிக் கொடுத்தது.

சென்னை சாந்தோம் டுமிங் லேன் என்ற பகுதியைச் சேர்ந்தவர் அழகிய தமிழ் மொழி. கூடைப் பந்து விளையாட்டு வீராங்கனையான இவரது வீட்டில் இருந்து சமீபத்தில் எல்.இ.டி. டி.வி., செல்போன், ஆடைகள், விளையாட்டு ஜாக்கெட்டுகள் ஆகியவை திருடு போயிருந்தன. இதுகுறித்து மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளைப் போட்டு பார்த்த போது அதில் திருடனின் உருவம் தெளிவாக பதிவாகியிருந்தது. அவரது அங்க அடையாளங்களை வைத்து போலீசார் அந்தத் திருடனைத் தேடி வந்தனர்.

இந்நிலையில் நொச்சிக்குப்பம் பகுதியில் சந்தேகம் கொள்ளும்படி சுற்றித் திரிந்த ஒருவரை அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரை சந்தேகத்தின் பேரில் மெரினா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அப்போது அந்த வாலிபர்தான் விளையாட்டு வீராங்கனை வீட்டில் கைவரிசைக் காட்டிய நபர் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

விளையாட்டு வீராங்கனை வீட்டில் நடந்த திருட்டு பற்றி முதலில் விசாரித்தபோது அது பற்றி தனக்கு தெரியாது என மறுத்து விட்டார். ஏற்கெனவே போலீசார் சிசிடிவியில் உள்ள உருவத்தை வைத்து அவர் பழைய குற்றவாளி அர்ஜுன்தான் என சந்தேகித்தனர். இந்நிலையில் அர்ஜுனின் சட்டையை கழற்றி பார்த்தனர். அப்போது அவர் உடலில் வெட்டுத்தழும்புகள் இருந்தன. தனது மனைவியிடம் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டு அர்ஜூன் கைகளில் உடலில் பிளேடால் கிழித்து தற்கொலைக்கு முயல்வது இயல்பு என போலீசார் தங்களது க்ரைம் பதிவேட்டில் அர்ஜுனைப் பற்றி குறித்து வைத்திருந்தனர்.

அதனை ஞாபகம் வைத்து அவரிடம் விசாரணை நடத்தியபோதுதான் விளையாட்டு வீராங்கனை வீட்டில் கைவரிசை காட்டியதை அர்ஜூன் ஒப்புக் கொண்டார். அவரிடம் இருந்து லேப்டாப் ஒன்றை போலீசார் பறிமுதல் செய்தனர். விளையாட்டு வீராங்கனை வீட்டில் கைவரிசை காட்டிய அர்ஜூன் அதற்குப் பின்னர் பாண்டிச்சேரிக்கு தப்பியோடி அங்கு தனது கூட்டாளி சுலைமான் என்பவருடன் சேர்ந்து 22 செல்போன்களை கொள்ளையடித்துள்ளார். அவற்றை சென்னை எண்ணூரில் உள்ள ஒரு செல்போன் கடையில் விற்றுள்ளார். அதனை மோப்பம் பிடித்த பாண்டிச்சேரி போலீசார் அர்ஜுனின் செல்போன் டவரை வைத்து அவன் இருப்பிடத்தை கண்டுபிடித்து சென்னைக்கு வந்து விட்டனர்.

இதனை எப்படியோ தெரிந்து கொண்ட அர்ஜூன் எண்ணூரில் செல்போன்களை விற்ற இடத்துக்கு போலீசார் சென்று கேட்டால் தான் மாட்டிக் கொள்வோம் என்பதால் அந்தக் கடைக்கு சென்று 22 செல்போன்களை மீண்டும் தானே வாங்கிக் கொண்டு, பர்மா பஜாரில் சென்று விற்று விட்டது தெரியவந்தது.விசாரணைக்குப் பின்னர் அர்ஜுனை  கைது செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்தனர்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close