[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

செல்போன் பேசிக்கொண்டிருந்த மாணவி தவறி விழுந்து படுகாயம்

a-cellphone-talking-student-fell-down-in-third-floor-at-chennai

சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் செல்போன் பேசிக்கொண்டிருந்த மாணவி நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார்.

சென்னை அயனாவரத்தில் வடக்கு மாட வீதியில் ராம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது மகள் தீபிகா (16) நேற்று இரவு தனது வீட்டு மாடியில் இருந்து கொண்டு செல்போனில் பேசியுள்ளார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் அடிப்பட்டு படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்து  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த மாணவியை பெற்றோர் உதவியுடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.

இதனையடுத்து K2 அயனாவரம்  காவல் நிலையத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் செல்போனில் பேசியபோது நிலை தடுமாறி தான் விழுந்தாரா? அல்ல வேறு ஏதும் பிரச்சனை காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close