[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தி.மலையில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்ய சிறப்புக்குழுக்களை அமைக்க பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு
  • BREAKING-NEWS வட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா

நீட் தேர்வு: புகைப்படம் இல்லாததால் வெளியேற்றப்பட்ட மாணவர் ! ரூ.40 கொடுத்து உதவிய காவலர்

neet-exam-police-offered-help-to-students-on-right-time

நீட் தேர்வு எழுத சென்ற மாணவன் புகைப்படம் இல்லாததால் வெளியேற்றப்பட்ட நிலையில், புகைப்படம் எடுக்க 40 ரூபாய் கொடுத்து உதவிய காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. தேர்வு எழுதும் மாணவர்கள் கடும் சோதனைகளுக்குப் பின்னர் தேர்வெழுதும் மையங்களில் அனுமதிக்கப்பட்டனர். தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 711 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர். இதில் மாணவர்கள் 53 ஆயிரத்து 470 பேர். மாணவிகள் 81 ஆயிரத்து 241 பேர். அவர்களின் வசதிக்காக தமிழகத்தில் மட்டும் 14 மாவட்டங்களில் 188 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கோவையில் உள்ள நேஷனல் மாடல் பள்ளியிலும் நீட் நுழைவுத் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்து. அங்கு பாதுகாப்பு பணியில் பா.சரவணகுமார் என்ற காவலர் ஈடுபட்டிருந்தார். அந்த நேரத்தில் தேர்வு எழுத வந்த மாணவர் ஒருவர், புகைப்படம் இல்லாததால் வெளியேற்றப்பட்டார். இதை பார்த்த காவலர் சரவணகுமார் உடடினயாக அந்த மாணவருக்கு 40 ரூபாய் வழங்கி புகைப்படம் எடுக்க உதவியோடு மாணவரை தேர்வு எழுதவும் ஏற்பாடு செய்தார். சிறிய உதவியாக இருந்தாலும் மாணவருக்கு தக்க நேரத்தில் உதவிய காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close