[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
  • BREAKING-NEWS போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்கள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS தெலங்கானா: 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது - தெலங்கானா போலீஸ்
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் பொன் மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பதை அறிவதில் சிரமம் இருக்கிறது - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

திமுக முன்னாள் எம்பி வசந்தி ஸ்டான்லி காலமானார்

dmk-former-mp-vasanthi-stanley-dead

திமுக முன்னாள் எம்.பி வசந்தி ஸ்டான்லி சென்னையில் காலமானார். அவருக்கு வயது 57.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பிறந்த வசந்தி ஸ்டான்லி, எழுத்தாளர், பத்திரிகையாளர் என பன்முகத் திறமை உடையவராகத் திகழ்ந்தார்.‌ கடந்த 2008-ஆம் ஆண்டு திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வாகினார். திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினர், தமிழக சிறுபான்மையினர் நல ஆணையம் உள்ளிட்ட மத்திய - மாநில அரசுகளின் ஆணையங்களில் பதவிகளை வகித்தார் வசந்தி ஸ்டான்லி.

உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்றிரவு வசந்தி ஸ்டான்லியின் உயிர் பிரிந்தது. இதைத்தொடர்ந்து, அவரது உடல், சென்னை ராயப்பேட்டையில் உள்ள லாயிட்ஸ் காலனியில் உள்ள வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக, வசந்தி ஸ்டான்லியின் உடல் வைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இன்று மாலையில் இறுதிச்சடங்குக்காக அவரது உடல் பாளையங்கோட்டைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close