[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

கல்லூரி மாணவர்களை தாக்கிய கும்பல் : சிசிடிவியை வைத்து போலீஸ் வலைவீச்சு

kanchipuram-students-attacked-by-a-gang-police-searching-with-cctv-footage

காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட் அருகே, கல்லூரி மாணவர்களைத் தாக்கிய ஸ்குவாஷ் பயிற்சியாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கடந்த வாரம் 18ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. அன்றைய தினம் மாலை 4 மணிக்கு காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டிற்கு கல்லூரி மாணவர்கள் சிலர் வந்தனர். அப்போது பொருட்களை வாங்கி விட்டு வெளியே வந்த கார்த்திக் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகிய கல்லூரி மாணவர்களிடம் அங்கிருந்த இருச்சக்கர வாகனம் ஒன்றை ஓரமாக நிறுத்துமாறு கூறியுள்ளார். அது அடையாளம் தெரியாத வாகனம் எனவும் அந்த வாகனத்தை வேறு இடத்தில் நிறுத்த முடியாது எனவும் அவர்கள் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் அவர்கள் இருவரையும் பலமாக தாக்கினார். தாக்குதல் நடத்திய அந்த நபர் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த ஸ்குவாஸ் பயிற்சியாளர் முருகேசன் என்பது தெரியவந்தது.

அவருடன் சேர்ந்து அம்பேத்கர் பகுதியை சேர்ந்த பூபதி, விக்கி, பூபாலன், மௌலி உள்ளிட்ட குண்டர்களும் கல்லூரி மாணவர்களை தாக்கியுள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளனர். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அங்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சி மூலம் அடையாளம் கண்டுகொண்டு, முருகேசன் மற்றும் உடன் இருந்த 4 குண்டர்களை தேடி வருகின்றனர். அந்தக் குண்டர்கள் தங்களை இரும்பு கம்பி மற்றும் கத்தி ஆகிய ஆயுதங்களை கொண்டு தாக்க முயன்றதாக அடிபட்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close