[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி
  • BREAKING-NEWS சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட காற்று மாசு குறைந்துள்ளது
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: கந்தர்பால் அருகே கண்ட்டில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரும் 14ஆம் தேதிமுதல் 16ஆம் தேதிவரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS அயோத்தியில் ராமர் கோயில்: அறக்கட்டளை அமைக்கும் பணி தொடக்கம்

தன் மகள் வெற்றியால் மனம் உருகிய ஏழைத்தாய் - கள்ளங்கபடம் அற்ற பேச்சு

gomathi-marimuthu-wins-india-s-first-gold-in-asian-athletics-her-mom-feelings-speech

தன் மகள் வெற்றி பெற்றது கூட தெரியாமல் இருந்ததாக ஆசியப் போட்டியில் தங்கம் வென்ற கோமதியின் தாய் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தோகாவில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 30 வயதான இந்திய வீராங்கனை கோமதி 2 நிமிடம் 02.70 வினாடியில் 800 மீட்டர் தூரத்தை கடந்து முதலிடத்தை பிடித்தார். இதன்மூலம் இந்தியாவிற்கு முதல் தங்கப்பதக்கத்தை கோமதி மாரிமுத்து பெற்றுத்தந்துள்ளார். ஆரம்பத்தில் கோமதி சற்று பின் தங்கி இருந்தார். பின்னர் தனது அபார ஓட்டத்தினால் சீன வீராங்கனை வாங் சுன்யு வை தோற்கடித்தார்.

இதுகுறித்து கோமதி மாரிமுத்து கூறுகையில், “நான் முடிவு கோட்டை முதலாவதாக கடந்து தங்கப்பதக்கம் வென்று விட்டேன் என்பதை என்னால் உணர முடியவில்லை. கடைசி 150 மீட்டர் தூரம் மிகவும் கடினமாக இருந்தது” என தெரிவித்தார். ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கத்தை வென்ற வீராங்கனை கோமதி மாரிமுத்து தமிழகத்தை சேர்ந்தவர். இவரது சொந்த ஊர் திருச்சி. ஏழ்மையான சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.

இவர் விளையாட்டின் மீது கொண்ட ஆர்வத்தால் 20 வயது முதலேயே தீவிர பயிற்சியை மேற்கொள்ள தொடங்கியுள்ளார். தற்போது பெங்களூருவில் வருமான வரித்துறை அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். மேலும் 2013-ஆம் ஆண்டு புனேவில் நடைபெற்ற ஆசிய போட்டியில் 7-வது இடத்தையும் 2015-ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 4-வது இடத்தையும் பிடித்தார்.

கோமதி தங்கப்பதக்கம் வென்றது தொடர்பாக திருச்சி முடிகண்டத்தில் உள்ள அவரது பெற்றோரிடம் புதிய தலைமுறை சார்பில் பேட்டி எடுக்கப்பட்டது. அப்போது பேசிய கோமதியின் தாய் ராசாத்தி, “என் மகள் வென்றதே எனக்கு தெரியாமல் இருந்தது. எனக்கு டிவி எல்லாம் போட்டு பார்க்கத்தெரியாது. நான் வேலை செய்துகொண்டிருந்தபோது எனது உறவினர்களின் குழந்தைகள், என்ன அத்தை டிவி பார்க்கலயா ? கோமதி ஓடி ஜெயிச்சுட்டாங்க.. அப்புடினு சொன்னாங்க. பின்னர் எனது உறவினர்களும் அதனை என்னிடம் சொன்னார்கள்’ என்று கள்ளங்கபடம் இன்றி கூறினார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close